ஆய்வாளர்கள் தங்களின் கட்டுரைகளை வருடம் முழுவதும் சமர்ப்பிக்கலாம்

About the Journal

உலக மொழிகளுள் 'செம்மொழி' என்னும் தகுதியைப் பெற்றதும் , மூத்ததும், இலக்கண இளகிய  வளங்களைப் பெற்ற முன்னோடி மொளியாகவும் தமிழ்மொழி திகழ்ந்து வருகின்றது எனப் பேசுவது பழம்பெருமையைப் போற்றுவ தாகவே உள்ளது. இதுநாள் வரையில் எந்தவொரு தமிழாய்வு இதழும் Scopus & Web of Science ஆகிய ஆய்வு மதிப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படவில்லை இது உண்மையிலேயே கவலையளிக்கும் செய்தியாகும். மொழி மற்றும் இலக்கியங்கள்  தவிர்த்த பிறதுறைகளில் அறிவுவழிப்ட்ட ஆய்வுகள் உயர்ந்தும் மேன்மையுடனும் வளர்ந்துவரும் இக்காலப் பகுதியில் தமிழ் ஆய்வாளர்கள் இன்றும் தகுதியான ஆய்விதழ்களைக் கண்டறிவதில் தடுமாறுகின்றனர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் இன்றைய சூழலில் உலகளாவிய ஆய்வுப்போக்குகளின் தரத்திற்கேற்ப தமிழாய்வினை உயர்த்துவதற்குத் தமிழில் தரமான, அனைத்துலக ஏற்புடைய ஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. ஆய்வாளர்கள் தங்களது தரமான கட்டுரைகள் வாயிலாகத் தங்களது பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும்.

இதனை மனதில் கொண்டே இந்திய தமிழ் ஆய்விதழ் Indian Journal of Tamil (E-ISSN: 2582-662X) எனும் இணைய இதழ் தொடங்கப் பெற்றுள்ளது.